நீங்க முதல்ல அதைப் பின்பற்றுங்க! இந்தியாவின் கருத்திற்கு அதிரடி பதிலளித்த சீனா!

0
192

ஆஸ்திரேலியாவில் குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்குபெற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கிழக்கு லடாக் எல்லை பதற்ற நிலைக்கு சீனா தான் காரணமென குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், அவருடைய இந்த கருத்துக்கு பதில் தெரிவிக்கும் விதமாக சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங்க் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டியளித்திருந்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, எல்லை விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட இருநாடுகளும் தங்களது கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும். எல்லைப்பகுதியில் கூட்டாக அமைதியை பராமரிக்க வேண்டும் என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு என்று அவர் கூறியிருக்கிறார்.

சீனாவிலுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்காக 2 தரப்பும் ராஜதந்திரத்தின் மூலமாகவும், ராணுவத்தின் மூலமாகவும் தொடர்பை தொடர்ந்து பாதுகாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும், அவர் தெரிவித்திருக்கிறார்.

குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்பாக அந்த கூட்டமைப்பு தங்களுடைய வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு கருவி என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleமாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு!
Next articleபெரும் சோகம் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து! 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here