இந்த வயசுல கேர்ல் பிரண்டு-லாம் சகஜம்.. அதெல்லாம் அப்படித்தான் கண்டுக்காதீங்க – விஜய்!!

Photo of author

By Rupa

இந்த வயசுல கேர்ல் பிரண்டு-லாம் சகஜம்.. அதெல்லாம் அப்படித்தான் கண்டுக்காதீங்க – விஜய்!!

Rupa

At this age girl friend-lam is normal.. Don't see it like that - Vijay!!

இந்த வயசுல கேர்ல் பிரண்டு-லாம் சகஜம்.. அதெல்லாம் அப்படித்தான் கண்டுக்காதீங்க – விஜய்!!

முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்பொழுது தனது திரை பயணத்தை விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக கூறியுள்ளார். இதனால் இவர் கமிட் செய்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கூடிய விரைவில் கோட் படமானது திரைக்கு வரவுள்ளது. இதில் பிரபுதேவா சினேகா லைலா மைக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பானது இறுதி கட்ட வேலையில் உள்ளது. இந்த நிலையில் விஜய் சரத்குமார் வீட்டிற்கு சென்றது குறித்தும் அங்கு நடந்தது குறித்த சுவாரஸ்யமான தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பு விஜய் அவர்கள் சரத்குமாரின் வீட்டிற்கு சென்று உள்ளாராம். அங்கு விஜய் வந்ததும் சரத்குமாரின் மகன் அவருக்கு அழைப்பு விடுத்து இங்கு விஜய் அங்கிள் வந்துள்ளதாக என்று கூறியுள்ளார். சரத்குமார், நான் வீட்டில் இல்லை என்று விஜய்யிடம் கூறுமாறு தெரிவித்துள்ளார். விஜயோ நான் உங்களைப் பார்க்க வரவில்லை உங்களது மகனை தான் பார்க்க வந்தேன் அவனுடன் விளையாட வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன் நடந்த இந்த அனுபவத்தை வாரிசு படப்பிடிப்பில் விஜய் இடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது என் மகன் தற்பொழுது வளர்ந்து விட்டான் என்னிடமே தனது கேர்ள் ஃபிரண்ட்ஸ் பற்றி பேசுகிறான் என்று கூறியுள்ளார். அதற்கு விஜய், இந்த வயது அப்படிதான் அதனை கண்டு கொள்ளாதீர்கள் என்று அட்வைஸ் செய்துள்ளார். விஜய் அவர்கள் இவ்வளவு கூலானா தந்தையாக இருக்கிறார் என்று சரத்குமார் பகிர்ந்து கொண்ட தகவலானது தற்பொழுது வைரலாகி வருகிறது.