அடேங்கப்பா!! தேர்வு இல்லாமல் அரசு வேலை வாய்ப்பு..அதும் அதிக சம்பளத்துடன்!!!

0
87

அடேங்கப்பா!! தேர்வு இல்லாமல் அரசு வேலை வாய்ப்பு..அதும் அதிக சம்பளத்துடன்!!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.இந்த பணிக்கு தகுதி மற்றும் திறமை கொண்ட நபர்கள் 29.07.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இந்நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆகும் இந்த பணியின் பெயர் தொழில்நுட்ப உதவியாளர்.இதற்கான மொத்தம்  பணியிடங்கள் இரண்டு தான்.இதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2022 இன்று மட்டும் .விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்.தற்போது வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு என இரண்டு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் வேளாண்மை பாடப்பிரிவில் டிப்ளமோ பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

இந்த பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் தோறும் பதினெட்டாயிரம் சம்பளம் தரப்படும்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

 

author avatar
Parthipan K