அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா?

0
83

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா?

அதர்வா நடிப்பில் 8 தோட்டாக்கள் புகழ் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் முடிந்தும் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மறைந்த முரளியின் மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அதன் பின்னர் அவரால் பெரிய அளவில் ஹிட்படங்கள் கொடுக்க முடியவில்லை. தனக்கான இடத்துக்காக அவர் போராடிக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் 8 தோட்டாக்கள் என்ற வெற்றிப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள திரைப்படம் குருதி ஆட்டம் ரிலீஸாகாமல் முடங்கிக் கிடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பே இதன் படப்பிடிப்பு முடிந்தாலும் தயாரிப்பாளரின் பொருளாதார சூழல் காரணமாக படம் ரிலீஸாகவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் அதுவும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது 8 மாதங்கள் கழித்து மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ் அறிவித்துள்ளார். குருதி ஆட்டம் திரைப்படத்தில் அதர்வாவுடன் பிரியா பவானி சங்கர், ராதிகா மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கியவேடத்தில் நடித்துள்ளனர்.