பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் 1984 வருடம் நடிகர் முரளி அறிமுகமானார். அதன் பின் 5 வருடங்கள் கழித்து, அதாவது 1989 ஆம் ஆண்டு நடிகர் முரளியின் மகன் அதர்வா பிறந்திருக்கிறார். பொதுவாக நடிகர் முரளி அவர்கள் தன்னுடைய காதல் படங்களுக்காகவும் பாடல்களுக்காகவும் பெரிதளவும் பேசப்பட்டு வருபவர்.
குறிப்பாக இவர் நடித்த இதயம், புதுவசந்தம், பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, அள்ளித் தந்த வானம் மற்றும் சுந்தரா ட்ராவல்ஸ் போன்ற படங்களுக்கு என்றளவும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் இவருடைய பாடல்களுக்கு முரளி ஹிட்ஸ் என்ற தனி பிரிவையே வைத்திருக்கும் ரசிகர்கள் என்றளவும் குறையவில்லை.
இன்னும் பல ஆண்டுகள் திரையுலகில் இருப்பார் என எதிர்பார்த்த நேரத்தில் அவரது மரணம் திடீரென்று நடந்தது. மாரடைப்பு காரணமாக வீட்டிலேயே மயங்கி விழுந்த முரளி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போவதற்குள் மரணத்தைத் தழுவி இருந்தார். முரளியின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவியோ அல்லது மகன் அதர்வா என யாரும் பெரிய அளவில் ஊடகத்தில் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், முரளியின் மகனான நடிகர் அதர்வா அவர்கள் தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பதாவது :-
அன்றைக்கு அக்காவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீட்டில் நடந்தது. உறவினர்கள் அனைவரும் வீட்டிலிருந்தனர். நாங்கள் தூங்கப் போவதற்கே விடியற்காலை ஆகிவிட்டது. என் அறைக்குப் பக்கத்தில்தான் அப்பா அறை இருந்தது. நான் தூங்கப் போன கொஞ்ச நேரத்தில் என் அறைக்கதவைத் தட்டி அழைத்தார்கள். எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. 20 நிமிடம் ஒன்றுமே புரியாமல் அப்படியே சாய்ந்து உட்கார்ந்து விட்டேன்” என்று மனமடைந்து தெரிவித்திருக்கிறார் நடிகர் அதர்வா.
மேலும், அவரது தந்தை இரவு 3 மணி அளவிலேயே இறந்துவிட்டிருக்கிறார். அறையில் தூங்கப் போனவரின் உயிர் படுக்கையிலேயே பிரிந்துள்ளது. அதிகாலை 5 மணிக்குத்தான் அதர்வா உள்ளிட்ட குடும்பத்தினர் அதை உணர்ந்துள்ளனர். இரவு முழுக்க வீட்டில் விசேஷம் என்பதால் அனைவரும் அந்த அசதியிலிருந்துள்ளனர். படுக்கையில் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த முரளியை முதல் மாடியில் உள்ள அவரது அறையிலிருந்து தனியாளாக தூக்கிக் கொண்டு கீழே இறங்க முடியாமல் தவித்ததாக தெரிவித்திருக்கிறார் நடிகர் அதர்வா.
அவருடன் அவருடைய தாயார் மட்டுமே இருந்த நிலையில், போராடி முரளி அவர்களே காரில் அமர வைத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் தன் தந்தையை அழைத்து சென்ற அந்த 20 நிமிடங்கள் தன் வாழ்வில் மிகக் கொடிய நேரம் என்றும் மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். இது மட்டுமின்றி தன் தந்தையை குறித்து பேசினால் மீண்டும் அந்த பயமானது தன்னை ஆட்கொண்டு விடுவதால் எங்கு தன் தந்தையை பற்றி பேசினாலும் அதை தவிர்த்து விடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.