இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே அட்லி… வேறென்ன வேணும்… வைரல் புகைப்படம்

Photo of author

By Vinoth

இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே அட்லி… வேறென்ன வேணும்… வைரல் புகைப்படம்

Vinoth

இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே அட்லி… வேறென்ன வேணும்… வைரல் புகைப்படம்

இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. அதையடுத்து தொடர்ந்து மூன்று படங்கள் விஜய்யோடு பணியாற்றி அந்த மூன்று படங்களும் ஹிட் ஆன நிலையில் முன்ன்ணி இயக்குனரானார்.

இந்த படங்களின் வெற்றியால் தற்போது அவர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் 25 நாட்கள் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது இந்த படத்தில் விஜய் ஒரு நாள் மட்டும் கௌரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் அட்லியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதற்காக விஜய் நேரில் சென்று அட்லிக்கு வாழ்த்து சொல்லியுள்ளார். இது சம்மந்தமாக ஷாருக் கான் மற்றும் விஜய் ஆகியோருடன் அட்லி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய்யின் அடுத்த பட இயக்குனர்கள் வரிசையில் அட்லியின் பெயரும் உள்ளது. அவர் ஷாருக் கான் படத்தை முடித்ததும் இந்த படத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.