தமிழ் திரையுலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர்தான் ‘அட்லீ’. முதன் முதலில் ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் ‘தெறி, மெர்சல், பிகில் போன்ற அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை கொடுத்தவர்’. அதன் பின் பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் வைத்து ‘ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். பாலிவுட்டிலும் இவர் இப்படத்தின் மூலம் பெருமை மிக்க இயக்குனராக மாறினார். இந்த படம் வேர்ல்ட் வைய்டாக ‘ரூ.1200 கோடி வசூல் செய்து வெற்றி பெற்றது’.
அதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் ”தெறி பட ரீமேக் ஆன ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அடுத்தடுத்து புதிய திட்டங்களை வகுக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் இப்பட ப்ரமோஷன் காக அட்லீ என்ன செய்யப் போகிறாரோ? என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனென்றால், இதற்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் “அட்லீ பிரமோஷன் காக ஒரு டிஷர்ட் ஐ அணிந்திருந்தார்.
அந்த டி-ஷர்ட் இன் விலை ரூ. 1,12,960. இது ரசிகர்களுக்கு இடையே பேசும் பொருளாக அமைந்தது ஒரு டி-ஷர்டின் விலை இவ்வளவா எனவும் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்”. இப்பொழுது ஒரு “பெரிய பிரமோஷன் மூலம் பேபி ஜான் படத்தை தயாரிக்க உள்ளதாக அட்லீத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்” என தகவல் வெளியானதை தொடர்ந்து அனைவரும் அது என்னவாக இருக்கும் என ஆர்வத்துடன் உள்ளனர்’.