நயன்தாராவின் டாக்குமென்டரியில் அட்லி கூரிய செய்தி!! அதிருப்தியில் ரசிகர்கள்!!

Photo of author

By Gayathri

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் உடைய திருமண ஆவணப்படம் தற்பொழுது பல பிரச்சினைகளைக் கடந்து நெட்பிளிக்ஸ் இல் வெளியாகி இருக்கிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தங்களுடைய திருமணத்தில் மிகப்பெரிய தொகையை வசூல் செய்துவிட எண்ணிய நயன் மற்றும் விக்கி ஜோடி வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தனர்.

இந்த டாக்குமென்டரி வெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் தனுஷ் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து நயன்தாரா கடிதம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டு சொன்ன நானும் ரவுடிதான் காட்சிக்காக தனுஷ் பத்து கோடி இழப்பீடு கேட்டிருந்தார்.

ஆனால், தற்போது வெளியாக்கியுள்ள டாக்குமெண்டரியில் நானும் ரவுடிதான் படத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை நீக்காமல் வெளியிட்டிருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்குவதாகவே உள்ளது. மேலும், இது குறித்து நடிகர் தனுஷ் விரைவில் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, டாக்குமென்டரியில் பல முக்கிய பிரபலங்கள் பேசியிருக்கின்றனர். அப்படி இயக்குனர் அட்லீ தங்களுடைய முதல் படம் குறித்து பேசி இருக்கிறார். இயக்குனர் அட்லி அவர்கள் கூறும் பொழுது, நயன்தாராவை நான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று தான் நான் அழைப்பேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் நயன்தாரா குறித்து இயக்குனர் அட்லி பேசுகையில், ராஜா ராணி படத்தின் கதையை அவரிடம் சொன்னபோது பொறுமையாக கதை கேட்டாராம். முதல் பகுதி முடிந்த பிறகு இதில் எனக்கு ஹீரோவை தெரியவில்லை. ஹீரோயினுக்கு தான் வேலை இருக்கிறது என்றாராம். பின்னர் மொத்த கதையையும் கேட்டுவிட்டு இரண்டு நாள் கழித்து பதில் சொல்கிறேன் என்று கூறிவிட்டார் என்று இயக்குனர் அட்லி தெரிவித்திருக்கிறார்.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அந்த படத்திற்கு நயன்தாரா ஓகே சொன்னதாக அட்லீ தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக இன்னும் பல பிரபலங்கள் நயன்தாரா குறித்து பேசி இருப்பது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.