சென்னை தி நகர் உள்ள ஒரு தனியார் நிறுவனம் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது. நேற்று மாலை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர் அசோக் நகரைச் சேர்ந்தவர். தலைமையில் ஊழியர்கள் கேகே நகரைச் சேர்ந்த வினோத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஊழியரான பீகாரைச் சேர்ந்த முகமது ஆகியோர் காரில் வந்து பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு இருந்தனர்.
காரில் மீதம் ரூபாய் 52லட்சத்தை வைத்து இருந்தனர் . அப்போது சற்று தள்ளி காரை ஓரமாக நிறுத்துவதாக டிரைவர் காரை எடுத்துச் சென்றார்.
மூன்று பேரும் ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை நிரப்பி விட்டு வந்தனர் ஆனால் சற்று தள்ளி காரை நிறுத்த கூறிய அம்ப்ரோஸ் வாகனம் காணாது அதிர்ச்சி அடைந்த மூவரும் அந்த பகுதி முழுவதும் தேடியும் அவரைக் காணவில்லை.
செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது ரூபாய் 52 லட்சத்துடன் டிரைவர் அம்ப்ரோஸ் தப்பிச் சென்றதை அப்போது அறிந்தனர்.
வேன் ஓட்டுநர் அம்புரோஸ் பணத்துடன் மாயமானாலும் அந்த வேனில் ஜிபிஎஸ் கருவி இருந்துள்ளது. அதை வைத்து போலீஸார் சோதித்தபோது அந்த வேன் ஆர்.கே.நகர் மணலி பகுதியில் இருப்பது கண்டுபிடிக்க பட்டது.
மேலும் அம்புரோஸ் மனைவி வியாசர்பாடியில் இருப்பது தெரியவந்தது அவரிடம் நடத்திய விசாரணையில் அம்புரோஸ் உறவினர் வீட்டில் 20 லட்ச ரூபாய் பதுக்கியது தெரிய வந்துள்ளது.
அந்த பணம் மீட்கப்பட்டது. மீதி பணத்துடன் தப்பிய அம்புரோஸைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இதேபோன்று பலமுறை பணத்துடன் வேன் ஓட்டுநர்கள் தப்பிச் சென்றதும் பின்னர் பிடிபட்டதும் நடந்துள்ளது.