ATM இல் பணம் எடுக்க OTP எண் ஜனவரி 1 முதல் அமல்?

Photo of author

By CineDesk

சமீபகாலமாக ATM எந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’ என்ற கருவியை பொருத்தி பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதனால் ATM எந்திரங்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் அஞ்சுகின்றனர்.

இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் வகையில் ATM எந்திரத்தில் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக SBI வங்கி குறைத்தது.இது ஒரு வழியில் உபயோகப் பட்டாலும் வாடிக்கையாளர்கள் ஒரு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என எண்ணினார்.

இந்த நிலையில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ATM எந்திரத்தில் பணம் எடுக்க ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் (OTP) முறையை ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்கிறது.

இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது

ATM எந்திரத்தில் நடக்கும் சட்டவிரோத பணபரிவர்த்தனையை குறைக்கும் விதமாக ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பதற்கு ஒரு முறை ரகசிய எண் பயன்படுத்தும் திட்டத்தை நாங்கள் அறிமுகம் செய்கிறோம்.

இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை இந்த முறை அமலில் இருக்கும். இந்த OTP வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும். இது சட்டவிரோத பணபரிவர்த்தனைகளில் இருந்து ஏ.டி.எம். வாடிக்கையாளர்களை பாதுகாக்க ஒரு சிறந்த வழிமுறை.

ஜனவரி 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் இம்முறை செயல்பாட்டுக்கு வருகிறது. ஆனால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் இதர வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தால் இந்த பாதுகாப்பு முறை பொருந்தாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.