அட்ராசக்க.. பெண்களுக்கு மாதம் ரூ 2500 வழங்கப்படும்.. இது உறுதி!! ஆண்களுக்கும் கட்டாயம் உதவித்தொகை!!

Photo of author

By Rupa

அட்ராசக்க.. பெண்களுக்கு மாதம் ரூ 2500 வழங்கப்படும்.. இது உறுதி!! ஆண்களுக்கும் கட்டாயம் உதவித்தொகை!!

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மகளிருக்கான ஆயிரம் வழங்கும் உதவி தொகை திட்டத்தை செயல்படுத்தியது முதலில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமென்றால் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகளுக் உட்பட்டிருத்தல் கட்டாயம் என தெரிவித்திருந்தனர். நாளடைவில் இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. மேற்கொண்டு பலருக்கு தகுதியிருந்தும் உதவி தொகையானது கொடுக்கப்படவில்லை.

இரண்டாம் கட்டமுறையாக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்கள் மறுவாழ்வு மையத்திலிருக்கும் பெண்கள் கார்ப்ரேஷன் ஊழியர்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் பெரியகருப்பிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்களுக்கும் இவ்வாறான உதவித்தொகை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். வரும் காலத்தில் அதற்கு வழி வகுக்கப்படும் என்று பதிலளித்தார்.

இதனையெல்லாம் தாண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 இடங்களை வெற்றி பெற்று எந்த ஒரு நன்மையும் தமிழகத்திற்கு இல்லை. தற்பொழுது வரை மத்திய அரசிடம் இருந்து நிதி கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதிமுக மற்றும் பாஜகவின் கீழ் அடிபணிந்து போகிறது என்று திமுகவினர் கூறுகின்றனர் ஆனால் அதே ஆளும் கட்சி மத்தியில் போராடி நிதியை வாங்க முடியவில்லை இன்று சரமாரி தாக்கி பேசினார். மேற்கொண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் பட்சத்தில் மகளிருக்கு மாதம் 2500 வழங்கப்படும் என்று கூறியதோடு கட்டாயம் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்துள்ளார்.