அதிகரிக்கும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கடிவாளம் போட மத்திய அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!

0
205
Alliance under the leadership of Bamaka! The leader of the party released important information about the 2026 assembly elections!
Alliance under the leadership of Bamaka! The leader of the party released important information about the 2026 assembly elections!

அதிகரிக்கும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கடிவாளம் போட மத்திய அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!

ஒரு மாதத்திற்கு முன்பு தான் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இம்மாதம் முதல் வாரத்தில் 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களின் 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து இலங்கை கடற்பறையினர் செய்து வரும் அத்துமீறல்களை எதிர்த்து பாமக கண்டனம் தெரிவித்து வருகிறது. தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு ஏன் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பெயரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள மீனவர்களை சரமாரியாக இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கியதில் படகை ஓட்டிய ஒருவருக்கு வலது கண் பார்வையை இழந்துவிட்டார். இது குறித்த பாமக தலைவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

கடந்த ஒரு மாதத்தில் நான்காவது கைது நடவடிக்கை இதுவாகும். அக்டோபர் 20-ஆம் தேதி 3 பேர், 27-ஆம் தேதி 7 பேர், கடந்த 6-ஆம் தேதி 15 பேர், இப்போது 14 பேர் என மொத்தம் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படியாக சிங்களக் கடற்படையின் அத்துமீறல் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலை பா.ம.க. தொடர்ந்து கண்டித்து வருகிறது; மத்திய அரசுக்கு முதலமைச்சர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்; இராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா?

மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும், ஏற்கனவே கைதானவர்களையும் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்பொழுது வரும் நாட்களில் இலங்கை கடற்படையினர் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே உள்ளது.இதனை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.

Previous articleஇவர்களின் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்! எலான் மஸ்க் அதிரடி!  
Next articleதமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த தினத்தில் வழக்கம் போல் செயல்படும்!