ரயில் பயணிகள் மீதான பெட்ரோல் தாக்குதல்!! அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை!! 

Photo of author

By Savitha

ரயில் பயணிகள் மீதான பெட்ரோல் தாக்குதல்!! அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது மரம் நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட நபர் உத்திரப்பிரதேச மாநிலம் டெல்லி அருகே நொய்டா பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்துள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளியின் பெயரை பயன்படுத்தி மதப் பிரச்சனையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் கூறி அவ்வாறான வதந்தி மற்றும் தவறான கருத்துக்கள் பதிவு செய்வோமர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கேரள காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் கேரள காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தவறான பிரச்சாரம் மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.