துரோகம் செய்த கணவரை வெட்டி கொலை செய்த மனைவி! கோவில்பட்டி அருகே பரபரப்பு!

Photo of author

By Sakthi

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லாயல்மில் பகுதியை சேர்ந்தவர் பிரபு இவருக்கு உமா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருந்து வருகிறார்கள். பிரபு அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கணவன், மனைவி ,இருவருக்கும் அனேக நேரங்களில் சண்டை நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் இரவு நேரத்தில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த பிரபு மகேஸ்வரி இடம் மறுபடியும் சண்டையிட தொடங்கியிருக்கிறார். அதோடு அவர் கள்ள தொடர்பு வைத்திருக்கும் அந்த பெண்ணை கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த மகேஸ்வரி அரிவாளை எடுத்து பிரபுவை சரமாரியாக வெட்டி இருக்கிறார்.

மகேஸ்வரியின் இந்த தாக்குதலில் கழுத்து மற்றும் தலை பகுதியில் வெகுவாக காயமடைந்த பிரபு, அலறியடித்துக்கொண்டு ரோட்டில் ஓடத் தொடங்கினார். அப்பொழுது திடீரென்று கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் பிரபு. இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி காவல்துறையினர், பிரபுவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதனை தொடர்ந்து நடந்த சம்பவத்தை விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து மகேஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.