பத்தாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் உலக நாடுகள் முழுவதும் பரவி இருந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டது. போட்டி தேர்வு மற்றும் பொதுத் தேர்வு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. அதுமட்டுமின்றி போட்டி தேர்வுகளும் பொது தேர்வுகளும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு போட்டி தேர்வு நடைபெற்றது நடப்பு கல்வி ஆண்டுக்கான 12 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இம்மாதம் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
அந்த தேர்வின் முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.