12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் 12 மட்டும் முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் மொபைல் ஆப் டெவலப்பர் பணிக்காக இலவச பயிற்சியை வழங்குவதோடு 45 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியும் வழங்க இருக்கிறது.
இதற்கு 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மொபைல் ஆப் டெவலப்பிங் ப்ரோக்ராமில் பல நுணுக்கங்கள் கற்றுத் தரப்படும் என்றும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் போன்றவற்றில் ஆப்புகளை டெவலப் செய்வதோடு அந்த ஆப்புகளுள் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதனை களைவதற்கான நுணுக்கங்களும் கற்றுத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மொபைல் ஆப் டெவலப்பிங் வகுப்பில் சில முக்கிய அம்சங்கள் :-
✓ உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்புடன் கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம்.
✓ ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் செயலிகளை உருவாக்க முடியும்.
✓ மொபைல் அப்ளிகேஷன்கள் விரைவாகவும் பாதுகாப்புடனும் இருக்க என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கற்றுக் கொள்ள முடியும்.
✓ இந்த மொபைல் ஆப் டெவலப்பிங் வகுப்பானது மொத்தமாக 210 மணி நேரங்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்கும் விதமாகவும் பல துறைகளில் மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற வகுப்புகள் தமிழக அரசு ஆள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதில் கலந்துகொண்டு மாணவர்கள் பயன் பெற்ற தங்களுடைய வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இந்த மொபைல் ஆப் டெவலப்பிங் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், கன்னியாகுமரி என 8 மாவட்டத்தில் இலவசமாக நடத்த இருப்பதாகவும் இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/3709 என்ற தமிழக அரசின் இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.