ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. முற்றிலும் இது இலவசம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Rupa

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. முற்றிலும் இது இலவசம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்திய குடிமகனாக அடையாளம் காட்ட ஆதர அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதனை தங்களது பான் கார்டுடன் இணைத்துக் கொள்ளும்படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்பொழுது வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் கூட ஆதார் அட்டை பான் கார்டு என்பது கட்டாயமாகிவிட்டது. பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பொழுது தனிப்பட்ட நபரின் வரி உள்ளிட்டவைகளை எளிதாக கவனிக்க முடியும்.

அதேபோல இதனை இணைக்க கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. தற்பொழுது ஆதார் அட்டையையும் புதுப்பித்துக் கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது. இதனை புதுப்பிக்க வேண்மென்றால் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட ஓர் கட்டணத்தை வசூல் செய்வார்.ஆனால் தற்பொழுது மத்திய அரசு நினைத்தேன் மூலம் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளும் வசதியை கொண்டு வந்துள்ளது.

இதற்கான காலக்கெடுவை இம்மாதம் 14ஆம் தேதி வரை கொடுக்கப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் நீட்டித்துள்ளது. அதன்படி ஆதார் கார்டை இலவசமாக இணையத்தின் மூலம் அப்டேட் செய்ய செப்டம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர்.இது குறித்த தகவலானது அதிகாரப்பூர்வ தளமான தனித்துவ அடையாள ஆணையம் மூலம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள் இ-சேவை மையங்களை தவிர்த்து இலவசமாகவே இனி இணையத்தின் மூலம் தங்களது ஆதார் அட்டையை அப்டேட் செய்து கொள்ளலாம்.