பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்!
இன்று முதல் அனைத்து பொது போக்குவரத்துகளும்,
பேருந்துகளின் தூய்மைப் பணி,எரிபொருள் சோதனை,தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து,பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.சென்னை, மதுரை,திருச்சி உள்ளிட்ட தொலைதூரப் பயணங்களுக்கு விரைவு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் களுக்கும் பயனாளர்களுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம்!
நகரப் பேருந்துகளில் 24 பயணிகளும், வெளியூர் பேருந்துகளில் 32 பயணிகளும், விரைவு பேருந்துகளில் 26 பயணிகளும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.வெளி மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படாது.மேலும் பேருந்து கட்டணத்தை எந்தவிதமான மாற்றமும் இல்லை.
பேருந்தில் ஏறும் முன்பு செய்ய வேண்டிய சோதனைகள்,மற்றும் ஓட்டுநர்கள், பயனாளர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள்!
ஓட்டுநர்கள்:
குளிர்சாதன பேருந்துகளில் குளிர்சாதன கருவியின் பயன்பாட்டை நிறுத்தி வைத்தல்,பேருந்துகளில் கிருமிநாசினி பயன்படுத்துதல்,ஏறும் இறங்கும் வழியை சரியாக பயன்படுத்த பயணிகளுக்கு அறிவுறுத்தல்,வெப்பநிலை பரிசோதனை, வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றுதல்.
மேலும் இரவு பயணத்தின்போது விரைவு பேருந்து ஓட்டுநர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 4 மணி வரை நடத்துநர்கள்,ஓட்டுனருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பணிபுரிய வேண்டும் என்றும்,நகர்ப்புறங்களில் வேகத்தடை போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை இருப்பதால் கவனமுடன் பணி புரிய வேண்டும் என்று போக்குவரத்து கழகம் மற்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மக்களின் கவனத்திற்கு!
காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு உள்ளவர்களை பேருந்துகளில் ஏற்ற அனுமதி வழங்கப்பட மாட்டாது.
பேருந்துகளில் பயணிக்கும் பொழுது முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.மேலும் முறையான சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
அனைத்து பொது போக்குவரத்துகளும் தற்போது இயக்கப்பட்டுள்ளதால் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது.எனவே மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
எனவே முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை நமக்கு நாமே செய்து கொண்டு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.