கடந்த 2023 ஆம் ஆண்டு பொது தேர்வின் பொழுது மதுரையை சேர்ந்த பிளஸ் டூ மாணவர் தன்னுடைய பொதுத் தேர்வு தாளின் முதல் பக்கத்தை நீக்கி வேறொரு விடைத்தாளுடன் சேர்த்து முறைகேடில் ஈடுபட்டது விசாரணையின் பொழுது தெரிய வந்த நிலையில், மாணவர்கள் இது போன்ற முறை கேடுகளை மேற்கொள்ளக்கூடாது என புதிய நடைமுறை ஒன்றை தமிழக தேர்வு இயக்ககம் வெளியிட்டு இருக்கிறது.
தமிழக தேர்வு இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல் :-
கடந்த காலங்களில் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை சுட்டிக்காட்டி மீண்டும் இது போன்ற முறைகேடுகள் நிகழாமல் இருப்பதற்காக விடைத்தாள்களில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக தமிழக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி, இதுவரை விடைத்தாள்களில் மாணவர்களின் உடைய விவரங்களை தலைமையாசிரியர்களே முதல் பக்கத்தில் இணைத்து வந்த நிலையில் தற்பொழுது அதனை தேர்வுகள் இயக்ககத்தின் கண்காணிப்பில் நேரடியாக இணைக்கப்பட இருப்பதாகவும் இனி விடைத்தாள்களிலிருந்து முதல் பக்கத்தை நீக்க முடியாது என்றும் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருக்கிறது.
அடுத்த மாதம் பொது தேர்வு நடைபெற உள்ள நிலையில் முதல் பக்கத்தை நீக்க முடியாத வகையில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும் என்றும் இதனால் இந்த ஆண்டு 100 சதவிகிதமாக முறைகேடுகளை தடுக்க முடியும் என்றும் தமிழக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருக்கிறது.