கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு! செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்!
தொழில்நுட்ப கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் டிப்ளமோ மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் போன்ற மாதங்களில் செமஸ்டர் தேர்வுகளானது நடத்தப்படுகின்றது. இந்தத் தேர்வு குறித்து கட்டண தொகையை அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் ரெகுலர் மாணவர்கள் என அனைவரும் நேரடி முறையில் கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி வந்தனர்.
இந்த முறையை தொழில்நுட்ப கல்வித்துறை தற்போது மாற்றியுள்ளது. அந்த வகையில் இனி பாலிடெக்னிக் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே தங்களின் தேர்வுகளின் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்துவதற்குரிய வழிமுறைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்கக் கூடுதல் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறையின் மூலம் மாணவர்களின் நேரம் மிச்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.