பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு.. இந்த நாளில் அலுவலகம் செயல்படாது!!

Photo of author

By Rupa

vinayagar chaturthi 2024: விநாயகர் சதுர்த்தியானது வரும் சனிக்கிழமை நாளில் வருவதால் அன்று இயங்கும் 100 பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படாது என கூறியுள்ளனர்.

தமிழகத்திற்கு வருமானம் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு இந்த சார் பதிவாளர் துறையை சாரும். அந்த வகையில் கிட்டத்தட்ட தமிழகத்தில் 571 அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்தங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு பலரும் லேண்ட் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதுண்டு. மேலும் சனிக்கிழமை நாட்களில் இதில் 100 அலுவலகங்கள் மட்டுமே இயங்கும்.

தற்பொழுது வரும் வாரம் ஆனது சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி வர உள்ளதால் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் விடுப்பாளித்துள்ளனர். மிகவும் முகூர்த்த நாளில் பத்திரப்பதிவு செய்ய நினைத்தவர் அனைவருக்கும் இது ஏமாற்றமே. மேற்கொண்டு அந்த சனிக்கிழமை நாட்களில் இயங்கும் நூறு அலுவலகங்கள் கூட இயங்காது என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து வழக்கம் போல் அடுத்த வாரம் சனிக்கிழமைகளில் அலுவலகங்கள் செயல்படும் என கூறியுள்ளனர்.

அதேபோல மக்கள் நேரில் வந்து பத்திரப்பதிவு செய்யும் முறையை தவிர்த்து ஆன்லைன் வழி ரிஜிஸ்ட்ரேஷன் கொண்டுவந்ததால் மக்களுக்கு கால விரையம் ஆவது குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களிடமிருந்து லஞ்சம் பெறுவதும் முற்றிலும் தவிர்க்கப்ட்டுள்ளது. இந்த திட்டமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.