சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்!!

Photo of author

By Jeevitha

சபரி மலை ஐய்யப்பன் கோவில் இந்த வருடத்திற்கான மண்டல பூஜை நாளை தொடங்கவுள்ள நிலையில், தேவஸ்தானம் இன்று மாலை 5 மணிக்கு திறக்க உள்ளது. பக்தர்களும் மாலை அணிந்து பக்தி இருந்து கோவிலுக்கு செல்ல தயாராகி உள்ளார்கள். பக்தர்களுக்காக பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரி மலை பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் தினமும் 70,000 பேரும், உடனடி தரிசனத்திற்கு 10,000 பேரும் அனுமதிக்கப்படவுள்ளது.

மேலும் இந்த ஆன்லைன் பதிவு வருகிற 30 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சபரி மலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கி உள்ளது. மேலும் பக்தர்கள் கொண்டு வரும் இருமுடி பைகளில் தேவையில்லாத பொருள்கள் வீணாக எரிக்கப்படுவதால், அதை தவிர்க்க தேவசம் போர்டு விளக்கம் கொடுத்துள்ளது. இருமுடி பையில் கொண்டு வரும் பொருட்கள் பெரும்பாலும் பூஜை பொருட்களாக இருந்தாலும் அவற்றை எரிக்க கூடாது என தெரிவித்துள்ளது.

அந்த நிலையில் இருமுடியில் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் எடுத்து செல்ல கூடாத பொருட்கள் கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, பன்னீர் ஆகும். மேலும் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் நெய் தேங்காய், வெல்லம், அரிக்கா கொட்டை, அரிசி, வெற்றிலை ஆகியவை ஆகும். மேலும் நடைபாதையில் வனப்பகுதியில் செல்லும் பக்தர்களுக்கு ஏதேனும் அவசர உதவி வேண்டும் என்றால்  24 மணி நேரமும் 91884 07523 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.