விவசாயிகள் கவனத்திற்கு.. இனி இது செயல்படாது! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
அனைத்திந்திய சார்பில் கூட்டுறவு வார விழா திருவாரூரில் நடைபெற்றது. இந்த விழாவானது எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் அரங்கேறியது. மேலும் இதில் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சர் சங்கரபாணி கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் அங்குள்ள 1262 பேருக்கு சுய உதவி குழு கடன் பயிர் கடன் ஓகே வற்றி வழங்கினார்.
இதன் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று கோடி ரூ. 25 லட்சம் ஆகும். அதுமட்டுமின்றி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதனை அடுத்து பேசிய அவர், விவசாயிகளின் அன்றாட கோரிக்கையாக இருப்பது சேமிப்பு கிடங்கு வேண்டும் என்பதுதான்.
அவர்களின் கோரிக்கை ஏற்று இனி ஒரு நெல் கூட மழையில் நனைந்து வீணாகத வகையில் 238 கோடி செலவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகிறது. திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 103 இடங்களில் உள்ளது. இனி இந்த திறந்தவெளியில் கிடங்குகள் செயல்படாது என்று கூறினார். அதற்கு மாறாக இனிவரும் நாட்களில் சேமிப்பு குடோன்கள் முறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.