ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்!
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.அதன் அடிப்படையில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் உள்ள தீவிரத்தன்மை தொடக்க வகுப்புகளில் இருந்தே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லி அரசானது செயல்பட்டு வருகின்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரியிலான மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.இந்த முறையில் திருத்தம் கொண்டுவர குழு ஒன்று அமைத்தது ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் முடிவில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால் மறுதேர்வு மூலம் இரண்டு மாதங்களுக்குள் மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் புதிய வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது.
மேலும் மறுதேர்வு எழுதும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்களை பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால் அடுத்த வகுப்புகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.