வனத்துறை தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு! தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று மாண்ட சென்ற புயலாக உருமாறி பல இடங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நேற்று இரவு இந்த மாண்டஸ் புயல் ஆனது பாண்டிச்சேரி மற்றும் ஸ்ரீஹரி போட்டோவிற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனை ஒட்டி கனமழை பெய்ய இருப்பதால் சென்னை விழுப்புரம் கடலூர் திருவள்ளூர் கொடைக்கானல் சேலம் திருவண்ணாமலை தர்மபுரி நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உத்தரவிட்டு உள்ளனர்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டு இன்று நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. அத்தோடு அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் தற்பொழுது கனமழை எதிரொலி காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
சார்நிலைப் பணியில் உள்ள வனத்தொழில் பழகுநர் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடைபெற இருந்தது. மாண்டச் புயல் காரணமாக இந்த தேர்வானது தற்பொழுது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.