அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
191
Attention Government School Students! NMMS Exam Results Released!
Attention Government School Students! NMMS Exam Results Released!

அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக இலவச கல்வி, இலவச பாடத்திட்டம் வழங்கப்பட்டும்.மேலும் அரசு பள்ளி மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தொழிற்கல்வி படிப்பிற்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்கிறது. அதுமட்டுமின்றி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எம் எம் எஸ் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் என் எம் எம் எஸ் தேர்வுவை நடத்தி வருகிறது.

இதில் சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றிய இடத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு தேர்வு 2022ஆம் ஆண்டு மார்ச் 5ம் தேதி தமிழகத்தில் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இதில் தேவண்ணகவுண்டனூர் , வெங்கிப்பாளையம், பொன்னம்பாளையம் உள்ளிட்ட அரசு நடுநிலைப் பள்ளிகள், வடுகப்பட்டி, கத்தேரி அரசு உயர்நிலை பள்ளிகள், வடுகப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து ஆறு பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். எட்டாம் வகுப்பு பயின்று வரும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு தேர்வு, பகுத்தறிவுத் திறன் பகுதி தேர்வு இரண்டு கட்டங்களாக தலா 90 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றன.

இதில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் தோறும் ரூ 1000 கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்பட உள்ளன. சங்ககிரி மையங்களில் தேர்வு எழுதிய அரசு நடுநிலைப்பள்ளி சேர்ந்த தேவண்ணகவுண்டனூர் மாணவர் சிவகார்த்திக் , வெங்கிப்பாளையம் மாணவி திகழினி, பொன்னம்பாளையம் கோகுல் கிருஷ்ணன் அரசு நடுநிலைப் பள்ளிகள் , வடுகப்பட்டி ஸ்ரீகாந்த், கத்தேரி அரசு உயர்நிலை பள்ளிகள் சந்தோஷ், வடுகப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி அபிஷேக் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை அந்தந்த பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர் ,பெற்றோர், அரசு கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

Previous articleவீட்டின் உரிமையாளரின் கண்முன்னே  கொள்ளையடித்த பொருட்களுடன்   திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்!
Next articleமுன்னாள் அதிமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று! எனக்கு பாதிப்பா? அவரே வெளியிட்ட முக்கிய தகவல்!