வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு! கட்டாயம் ஆன்லைனில் இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்!
பொதுவாகவே அனைவருடை வீட்டிலும் ஏதேனும் ஒரு வகையான செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் செல்லபிராணிகளை முறையாக பராமரிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.வீட்டில் வளர்கப்படும் நாய்,பூனை போன்ற செல்லப்பிராணிகள் குறித்து முழு விவரங்கள் தற்போது வரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை.
குறிப்பாக 1500 செல்லப்பிராணிகள் மட்டுமே வீடுகளில் வளர்க்கப்படுகின்றது என புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.சென்னை மாநகராட்சியில் வீடுகளில் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப்பிராணிகள் வீடுகளில் எத்தனை உள்ளது என முறையாக புள்ளி விவரம் கிடைக்கவில்லை. அதனால் அவற்றை ஒழுங்கு படுத்துவதற்காக புதிய திட்டம் ஒன்று அமல்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திட்டம் ஜனவரி மாதம் 2 வது வாரத்தில் இருந்து செயல்படுத்தப்படும் மாநகராட்சி வெப் சைட்டில் செல்லப்பிராணிகள் குறித்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கால்நடை டாக்டர் கமால் உசேன் தெரிவித்துள்ளார்.செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக சிகிச்சை,வெறிநாய் தடுப்பூசி போன்றவைகள் முறையாக போடப்படுகின்றது.
இதற்காக திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய நான்கு இடங்களில் இதற்காக மருத்துவமனை உள்ளது.வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும்.ஆண்டுக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்தி அந்த உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் குறித்து சரியான புள்ளி விவரம் கிடைக்காததால் ஆன்லைன் பதிவு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
நாய் வளர்ப்பவர்களின் பெயர் ,அடையாள அட்டை,நாய் போட்டோ தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் போன்றவைகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஆன்லைன் வழியாக பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்த பிறகு செல்லப்பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதாஎன்பதை ஆய்வு செய்து பிறகு உரிமம் வழங்கப்படும்.