கவனம்!! தண்ணீரை இப்படி குடித்தால் ரத்த நாளங்கள் வெடித்து உயிருக்கே உலை வைத்துவிடும்?

Photo of author

By Pavithra

கவனம்!! தண்ணீரை இப்படி குடித்தால் ரத்த நாளங்கள் வெடித்து உயிருக்கே உலை வைத்துவிடும்?

பொதுவாகவே பலருக்கும் இந்த பழக்கம் இருக்கின்றது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை,வெளியில் சென்று வந்த பிறகு,வந்த உடனே தண்ணீர் குடிப்பது.அதிலும் சில பேர் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட தண்ணிரை குடிக்கும் வழக்கம் இருக்கும்.பிரிட்ஜில் வைத்த தண்ணீரை,நாம் சாப்பிடும் பொழுது அல்லது சாப்பிட்ட உடனேயே குடித்தால்,நம் உணவில் உள்ள எண்ணெய் பொருட்கள் கட்டியாக மாறிவிடும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் வெளியில் சென்று வந்த உடனேயே நாம் குளிரூட்டப்பட்ட தண்ணீரை குடிப்பதால் நம் உயிருக்கே உலைவைக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? வாங்க இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே நாம் வெளியில் சென்று வரும் பொழுது,நம் உடலின் வெப்பநிலையானது சுற்றுச் சூழலின் வெப்ப நிலைக்கு ஏற்ப இருக்கும்.நம் உடல் அறை வெப்ப நிலைக்கு வருவதற்கு,குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது எடுத்துக்கொள்ளும்.
இந்நிலையில் நாம் வெளியில் சென்று வந்தவுடன் பிரிட்ஜில் வைத்த தண்ணீரை அல்லது சாதாரண தண்ணீரை குடிப்பதால்,நம் உடலானது,சட்டென்று வெப்பநிலையை குறைக்க பார்க்கும்.இது போன்று அதிக வெப்பநிலையில் இருந்து திடீரென்று,குறைந்த வெப்ப நிலைக்கு நம் உடல் மாறுவதால் நம் உடலில் உள்ள சிறிய ரத்தக் குழாய்கள் வெடித்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமென்று
மருத்துவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

குடித்தால் மட்டும்தான் இப்படி ஆகுமா என்றால்,இல்லை.வெளியில் சென்று வந்தவுடன்,மிகக் குளிர்ந்த தண்ணீரால் முகம்,கை,கால் கழுவும் போது கூட இந்த பிரச்சனை உங்கள் உடலில் நடக்க நேரிடும்.இது மட்டுமின்றி நாம் இதுபோன்று சட்டென்று நம் உடலின் வெப்பநிலையை குறைக்க நேரிடும் பொழுது இதயத்தின் நரம்புகளை இயக்க விடாமல் செய்து மாரடைப்பை உருவாக்குகின்றன.மேலும் இரத்த நாளங்களில் கொழுப்பு படிதல்,கல்லீரல் பிரச்சனை, பெருங்குடல் பாதிப்பு, புற்றுநோய் தாக்கங்களையும் நம் உடலில் ஏற்படுத்தும்.

சரி வெளியில் சென்று வந்தவுடன்,எப்படித்தான் தண்ணீர் குடிப்பது? கை, கால், முகங்களை கழுவுவது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.வாங்க அதையும் தெரிந்து கொள்ளலாம்!

வெளியில் சென்று வந்த பிறகு,வெதுவெதுப்பான நீரில் முகம்,கை,கால்களை கழுவிய பின் வீட்டிற்குள் வந்து குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நம்மை நாம் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.அரை மணி நேரத்திற்குள் நம் உடலானது அறையின் வெப்பநிலைக்கு வந்துவிடும்.அதற்குப் பின்னரே,உங்களுக்கு குளிரூட்டப்பட்ட தண்ணீர் குடித்தால் மட்டும்தான் தண்ணீர் தாகம் அடங்கும் என்று நினைப்பவர்கள் குறைந்த பட்சமாக குளிரூட்டப்பட்ட தண்ணீரை குடிப்பது நல்லது.மற்றவர்கள் சாதாரண நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை குடிப்பது நல்லது.

நாம் முடிந்த அளவிற்கு குளிரூட்டப்பட்ட தண்ணீரை குடிப்பதை தவிர்த்து விட்டு வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க பழகிக்கொண்டால் நம் உடலில் உயிருக்கே உலைவைக்கும் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.