புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கவனத்திற்கு! ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் அமல்! 

0
180
Attention migrant workers! One country, one ration scheme will be implemented from today!
Attention migrant workers! One country, one ration scheme will be implemented from today!

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கவனத்திற்கு! ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் அமல்!

கொரோனா காலகட்டத்தில் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ஐந்து கிலோ அரசி வழங்கப்பட்டது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்தது.மேலும் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

வழக்கமாக பொங்கல் பண்டிகை என்றாலே அனைத்து குடும்ப அட்டைதாரரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக அரசு சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.அந்த பொங்கல் தொகுப்பில் பொருட்கள் தரமற்றதாக இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது அதன் காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முன்னதாகவே சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழுகரும்பு வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 10 தேதி முதல் 13 ஆம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இருந்தாலும் ஜனவரி 15 ஆம் தேதி ஆனா நிலையிலும் பலரும் பொங்கல் பரிசு பெறவில்லை என கணக்கீடப்பட்டது.அதனால் மறு அறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் பொங்கல் பரிசினை பெறாதவர்கள் பெற்று கொண்டனர்.இந்நிலையில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் முடிவுக்கு வந்தது.

அதனால் இன்று முதல் வழக்கமாக வழங்கப்படும் அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் ரேஷன் அட்டையில் உள்ள முகவரியில் தான் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகின்றது.ஆனால் இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தொழிலுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அதனால் தற்போது அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில்.ரேஷன் அட்டைதாரர்கள் அத்யாவசிய உணவுப் பொருட்களை எந்த இடத்தில் இருந்தும் எந்த ரேஷன் கடைகளிலும் பெற்று கொள்ளலாம்.இன்று முதல் அடுத்த மாதத்திற்கான உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.அதனை எந்த இடத்தில் இருந்தாலும் அந்த முகவரிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்று கொள்ளலாம்.

Previous articleசுயதொழில் செய்பவர்களா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் சலுகை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 
Next articleஇந்த இடைத்ததேர்தலில் கட்டாயம் இரட்டை இலை சின்னம் முடங்கும்!! தேர்தல் ஆணையத்தின் ரிசல்ட்டை இன்றே கணித்த டிடிவி!!