பெண்கள் தங்கள் முகத்தை மிருதுவாக வைத்துக் கொள்ள மாய்ஸ்சரைசர் பயன்படுத்துகின்றனர்.ஏதோ பிராண்ட் மற்றும் தங்களுக்கு சருமத்திற்கு ஒத்துப்போகாத மாய்ஸ்சரைசர் பயன்படுத்தினால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.எனவே மாய்ஸ்சரைசரை சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.
1)சருமத்தை வறட்சியாகாமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
2)சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.வெயிலால் உங்கள் சரும நிறம் மாறாமல் இருக்க நீங்கள் வெளியில் செல்லும் முன் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.
3)மாய்ஸ்சரைசர் இயற்கை வைட்டமின்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் இதை பயன்படுத்தும் பொழுது சருமத்திற்கு ஒருவித புத்துணர்வு கிடைக்கிறது.
4)வறண்ட சருமம் மட்டுமின்றி எண்ணெய் பசை சருமத்திற்கும் மாய்ஸ்சரைசர் இருக்கிறது.நமது ஸ்கின் டைப்பிற்கு ஏற்றவாறு மாய்ஸ்சரைசர் வாங்கி பயன்படுத்தி வந்தால் உண்மையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
5)பொலிவிழந்த சருமத்தை பொலிவாக மாற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுகிறது.அதேபோல் சருமம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.
6)சருமத்தை மிருதுவாக,அழகாக மற்றும் ஹெல்தியாக வைத்துக் கொள்ள வைட்டமின் ஈ ஆயில் கொண்டு தயாரிக்கப்படும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.
7)சிலவகை மாய்ஸ்சரைசர் உங்கள் சருமத்தை 24 மணி நேரமும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
8)பருவ காலத்திற்கு ஏற்ப மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.சிலருக்கு பனி காலங்களில் சருமம் வறண்டு போகும்.சிலருக்கு வெயில் காலத்தில் சருமம் வறண்டு போகும்.அவரர் ஸ்கின்னை பொறுத்து மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
9)முகம் மற்றும் தோல் வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் வாங்கி பயன்படுத்துங்கள்.சிலருக்கு குறைவான அளவு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தினாலே நல்ல பலன் கொடுக்கும்.சிலர் இரவு நேரத்தில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவார்கள்.இது பெரும்பாலும் [பலனளிக்காது.
10)மாய்ஸ்சரைசர் பயன்படுத்துபவர்கள் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.முகத்தை கழுவிய பின்னர் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தினால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் வறண்ட சருமம் இருபவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.