வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த கோட்டை தாண்டி நின்றால் ரூ 500 அபராதம்!
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால் தான் இவ்வாறான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அதனால் சென்னை மாநகரம் முழுவதும் உள்ள முக்கிய சிக்னல்களான அன்னாசாலை, தேனாம்பேட்டை, வேப்பேரி, சென்ட்ரல், கோயம்பேடு, ஓஎம்ஆர் சாலை, திருவான்மியூர், அடையார் உள்ளிட்ட 150 சிக்னல்களில் நேற்று அதிகாலை முதல் புதிய விதிமுறை ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த விதியில் போக்குவரத்து போலீசார் விதிகளை மீறி சிக்னல் விழுவதற்கு முன்பு வாகனம் இயக்குவார்கள், திருப்பம் இல்லாத இடத்தில் திரும்புதல், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்தல், ஒழுங்கற்ற முறையில் சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள எல்லைக்கோட்டை தாண்டி வாகனம் நிறுத்திய வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த புதிய விதிமுறை குறித்து அனைத்து சிக்னல்களிலும் ஒலிபெருக்கியின் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு இந்த போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.