TN Gov: புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் நியாயவிலை கடை மூலம் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக ஒரு 1 கோடியே 20 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது புதிய இணைப்பாக ஒரு லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். மேற்கொண்டு வருடம் தோறும் புதிதாக ரேஷன் அட்டை பெரும் பெண்மணிகளும் இந்த திட்டத்தின் கீழ் இணையப்படுவர் என்று தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் அரசு ஊழியர்களின் மனைவிகள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் என அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அரசின் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுகளின் கீழ் இருந்தால் மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும். தற்பொழுது புதிய ரேஷன் அட்டையானது விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதால் புதிய இணைப்பாக மகளிர் உரிமை தொகை இரண்டரை லட்சம் பேருக்கு கொடுக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அரசானது முகாம்கள் அமைத்து விண்ணப்பங்களை வழங்குவர். அச்சமயத்தில் புதிய ரேஷன் அட்டை பயனாளிகள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.