வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள சன்ஸ்க்ரீன் பயன்படுத்தப்படுகிறது.வெயிலால் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.சருமப் புள்ளிகள்,கரும் புள்ளிகள்,அரிப்பு,எரிச்சல்,தோல் நிற மாற்றம் போன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க வெளியில் செல்லும் முன் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
குறிப்பாக பெண்கள் தங்கள் சரும அழகை பரமரிக்க சன்ஸ்க்ரீனை பயன்படுத்த விரும்புகின்றனர்.அனைத்து சருமத்திற்கும் ஏற்ற சன்ஸ்க்ரீன் SPF 30 மற்றும் SPF 50 ஆகும்.நீங்கள் UVA,UVB போன்ற கதிர்களில் இருந்து நமது சருமத்தை காக்கும் சன்ஸ்க்ரீன் வாங்க வேண்டும்.
வறண்ட சருமம் இருப்பவர்கள் ஆயில் கலந்த சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்.இந்த சன்ஸ்க்ரீனை குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் பயன்படுத்தலாம்.வெயில் காலத்தில் குழந்தையின் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1)நீங்கள் முதன் முதலில் குழந்தைக்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் குழந்தையின் சருமத்தில் சிறிதளவு அதை அப்ளை செய்து பரிசோதித்து பார்க்க வேண்டும்.
2)குழந்தைகள் சருமத்தை பாதுகாக்கும் சன்ஸ்க்ரீன் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.அதிகளவு சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
3)சன்ஸ்க்ரீன் பயன்படுத்தும் பொழுது குழந்தையின் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.குழந்தைகளுக்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்திய பிறகு அதிக நேரம் வெயிலில் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
4)குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சன்ஸ்க்ரீனில் SPF 30 இருக்கின்றதா என்பதை சோதிக்க வேண்டும்.அதேபோல் SPF 30க்கு மேல் இருக்கும் சன்ஸ்க்ரீனை பயன்படுத்தலாம்.
5)குழந்தைக்கு சன்ஸ்க்ரீன் அப்ளை செய்த பிறகு எரிச்சல் ஏற்பட்டால் அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.குழந்தைக்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்தும் முன் ஒருமுறை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.