மக்களின் கவனத்திற்கு! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
ஆதார் எண் என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.அதனால் வங்கி கணக்கு முதல் அனைத்து ஆவணக்களுடனும் ஆதார் எண் இணைப்பது கட்டயமக்கபட்டு வருகின்றது.அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசானது தற்போது 100 யூனிட் மானியம் வழங்கி வருகின்றது.அதனை தொடர்ந்து பெறவேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆனால் இதற்காக அரசு கால அவகாசம் வழங்கியது.அந்த கால அவகாசம் நாளை இறுதி நாளாகும்.அதனால் மின்வாரியங்களில் அதிக அளவு மக்கள் கூடுகின்றனர்.
மேலும் இவ்வாறு மக்கள் அதிகளவு கூடுவதினால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என புகார் எழுந்து வருகின்றது.அதனால் தமிழக அரசு மின்வாரியங்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் ஆதார் மின் இணைப்பு தொடர்பான பணிகள் காரணமாக மின்வாரியம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளானது ஆதார் இணைப்பு பணிகளை மேற்பார்வையிட ஒரு நிர்வாக பொறியாளரை நியமிக்க வேண்டும்.
ஆதார் மின் நுகர்வோர் எண் இணைப்பு பணிகள் இடையில் எந்த காரணத்திற்காகவும் நிறுத்தக்கூடாது.இந்த செயல்முறையின் அனைத்து விளக்கங்களையும் மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.ஆதார் இணைக்க வரும் மக்களுக்கு தேவையான அளவிற்கு இருக்கை வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
கூட்டம் அதிகமாக இருந்தால் ஷாமியான பந்தல் அமைக்க வேண்டும் மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் கவுண்டர்கள் மற்றும் கணினிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் இந்த செயல்முறை முற்றிலும் இலவசமானது குறிப்படத்தக்கது.