ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 1 வாரம் தான் டைம் ..இது இருந்தால்தான் உங்களுக்கு மாதம் ரூ 1000!!
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் ஆட்சி ஆரம்பித்து ஓராண்டுகள் கடந்த நிலையிலும் தற்பொழுது வரை இந்த திட்டம் செயல்முறைக்கு வரவில்லை. பலமுறை மக்கள் இது குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஆனால் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறியபடியே தான் இருந்தனர்.
தற்பொழுது மார்ச் ஆறாம் தேதி இந்த திட்டம் செயலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குவதானது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறினர். அந்த வகையில் எந்தெந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு உள்ளது என்று கணக்கீடு நடத்தப்பட்டது.
அதில் கிட்டத்தட்ட 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே இந்த 14 லட்சம் பேரும் உடனடியாக வங்கி கணக்கை தொடங்க வைக்க வேண்டும் என்று கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.இது மாதம் ரூ.1000 வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை என்று பேசி வருகின்றனர். எனவே வரும் ஒரு வாரத்திற்குள் வங்கி கணக்கு இல்லாதவர்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் கணக்கை தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு கணக்கை தொடங்கினால் மட்டுமே அவர்களுக்கு முறையாக ரூ 1000 சென்றடையும் என்று தெரிவித்துள்ளனர்.