மாணவர்கள் கவனத்திற்கு! கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியானது!
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிவான நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளின் தற்கால மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அனைவரும் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். 2022-23 ஆம் கல்வியாண்டில் படித்தவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு முடிவடைந்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பள்ளிகளில் தொழிற்படிப்பு படித்த மாணவர்கள் இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர் மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்கும்போது உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் பொன்மொழி தெரிவித்துள்ளார். தொழிற்கல்வி படித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேரும் பொழுது 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுக்கான செமஸ்டர்கள் ஜூலை 18 ஆம் தேதி முதல் துவங்கப்படும் எனவும் அமைச்சர் பொன்மொழி அறிவித்துள்ளார்.
12 ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் வெளியான நிலையில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது வரைக்கும் 85 ஆயிரத்து தொள்ளாயிரத்து இரண்டு மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
ஆனால் சிபிஎஸ் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் கல்லூரிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.