மாணவ மாணவிகளின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

Photo of author

By Sakthi

மாணவ மாணவிகளின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!
அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் 107395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர மூன்று லட்சத்திற்கும் மேலான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்கள் கேட்கும் பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதைத் தொடர்ந்து அந்தந்த பாடப்பிரிவுகளின் அடிப்படையில் தனி வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழ் மொழி பட்டப்படிப்பிற்கு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கென தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கில மொழி பட்டப்படிப்புக்கு ஆங்கில மொழி பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு என்று தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தனி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளி மாணவ மாணிவிகளுக்கான கலந்தாய்வும் இன்று தொடங்கி மே 31ம் தேதி வரூ நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஜூன் 12ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதையடுத்து ஜூன் 22ம் தேதி முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் தெடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.