பிளஸ் டூ பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு! ஜனவரி 13ஆம் தேதிக்குள் கட்டாயம் இதனை செய்திருக்க வேண்டும்!

Photo of author

By Parthipan K

பிளஸ் டூ பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு! ஜனவரி 13ஆம் தேதிக்குள் கட்டாயம் இதனை செய்திருக்க வேண்டும்!

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் தரப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடுத்தக்கது. மேலும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி தான் பள்ளிகள் அனைத்திற்கும் அரையாண்டு தேர்வு முடிவடைந்து நிலையில் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த அறிவிப்பில் அரசு பள்ளிகளில் பிளஸ் டூ பயிலும் மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை தொடங்குவதற்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இணைய வழி மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதனால் ப்ளஸ் டூ மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் இருக்க வேண்டும். அதற்கு மாணவர்கள் அவரவர்களின் வகுப்பு ஆசிரியர்கள் உதவியோடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு மின்னஞ்சலை பயன்படுத்துவது குறித்து ஆசிரியர்கள் முறையாக தெரிவிக்க வேண்டும்.

பிளஸ் டூ மாணவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதிலிருந்து முகவரிக்கு நான் மின்னஞ்சல் முகவரியை பெற்றேன் எனவும் உயர்கல்விகள் மாணவர்களின் இலக்கிய என்ன என்ற விவரத்தை பதிவிட்டு அனுப்ப வேண்டும். இந்த மின்னஞ்சல் உருவாக்கும் பணியை வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் விரைந்து அனைத்து பள்ளிகளும் முடிக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.