ஆசிரியர்களின் கவனத்திற்கு! இன்று முதல் தொடங்குகிறது உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையையும் நிறைவுற்ற காலிப்பணியிடம் நிரப்ப சிறிது காலமாகும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஏற்பாடாக ஜூலை 1-ம் தேதி முதல் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களின் விவரங்களின் அடிப்படையில் நிரப்பிக்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியிலுள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்து தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.அவ்வாறு தேர்வு செய்யப்படும் பொழுது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
மாத மதிப்பூதியம் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 7,500 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 10,000 ரூபாயும், முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும். அந்தந்த ஆசிரியர் பணிக்கு தகுதியான நபர்களை பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட பாடத்திற்கு தகுதியான நபர்களை மட்டுமே குழுவின் மூலம் எந்தவித புகாருக்கும் இடமின்றி தேர்வு செய்து நிரப்பிக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாக குழு மூலம் ஆசிரியர் நியமனம் செய்வது எதிரனாது இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தற்காலிக ஆசிரியர் நியமன தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட வேண்டும். அந்த சுற்றறிக்கையில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் இந்த அறிவிப்பில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்று முதல் ஜூலை 6 ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது. மேலும் முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பணிக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.