வங்கியில் GOLD LOAN வாங்கியிருப்பவர்கள் கவனத்திற்கு.. இனி இதற்கு அனுமதி கிடையாதாம்!!
நம் இநதியர்களின் உணர்வுடன் கலந்த ஆபரணமாக தங்கம் உள்ளது.நல்லது,கெட்டது என்று எந்த நிகழ்விலும் தங்கத்தின் தேவை இன்றியமையாத ஒன்று.தங்கத்தை ஆபரணங்களாகவும்,காசாகவும் வாங்கி வைக்கும் பழக்கம் நம் மக்களிடம் உள்ளது.
அது மட்டுமின்றி தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதினால் அவை சிறந்த முதலீடாகவும் திகழ்கிறது.அவசர தேவைக்கு அண்ணன்,தம்பி உதவுகிறார்களோ இல்லையோ தங்கம் உதவும் என்பது மறுக்க முடியாத கருத்து.
நம்மிடம் இருக்கும் தங்கத்தை வங்கியில் அடகு வைத்து அதற்கான பணத்தை பெற்று நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.தங்கம் இருந்தால் பிறரிடம் சென்று அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படாது.அவசர காலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் நம்மிடம் உள்ள நகைகளை வைத்து பணம் திரட்டி கொள்ளலாம் என்ற மன தைரியம் இருப்பதினால் தான் தங்கத்தை வாஙக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் நகைகளை அடகு வைத்தால் அதை விரைவில் மீட்க முயற்சி எடுக்க வேண்டும்.ஒரு சிலர் நகைகளை அடகு வைத்து விட்டு அதற்கு வட்டி கட்ட முடியாமல் மீண்டும் அதே நகையை புதுப்பிப்பார்கள்.இதனால் நகைகள் ஏலத்திற்கு போகாமல் இருக்கும்.அது மட்டுமின்றி நகைக்கான வட்டியையும் புதுப்பிக்கும் பணத்தில் இருந்து கட்டுவார்கள்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நகைக்கடன்கள் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதா? கடன்கள் முறையாக முடிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கிளைகளுக்கு அதன் தலைமை வங்கிகள் உத்தரவிட்டுள்ளது.அது மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நகைக்கடன்களை இனி புதுப்பிக்க மற்றும் மேம்படுத்த அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.தலைமை வங்கிகளின் இந்த உத்தரவால் கிளைகளில் நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.