புது பைக் வாங்க நினைப்பவர்கள் கவனத்திற்கு.. 5 வருட மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் பற்றி தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

Photo of author

By Divya

புது பைக் வாங்க நினைப்பவர்கள் கவனத்திற்கு.. 5 வருட மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் பற்றி தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

உங்களில் ஒவ்வொருவருக்கும் புதிதாக பைக் வாங்க வேண்டுமென்ற பெரிய கனவே இருக்கும்.நடுத்தர வர்க்கத்தினர் நீண்ட காலமாக புதிய பைக் வாங்க வேண்டுமென்ற ஆசையுடன் இருக்கிறார்கள்.

இவ்வாறு தங்களுக்கு பிடித்த பைக் பற்றி முழு விவரம் அறிந்து வைத்திருக்கும் நீங்கள் பைக் வாங்கிய பின்னர் என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் பைக்கை பதிவு செய்த பின்னர் நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் காப்பீட்டு கவரேஜ் பெறுவது.மோட்டார் வாகன சட்டப்படி உங்களது இருசக்கர வாகனத்துக்கு இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி எடுப்பது அவசியமாகும்.

இருசக்கர வாகன இன்ஸ்யூரன்ஸ் பேக்கேஜ் பாலிஸிகளைப் பொருத்தமட்டில் தேர்டு பார்ட்டி லயபிலிட்டி கவரேஜ் (Third-Party Liability Cover (TP)), ஓனர் மற்றும் ஓட்டுநருக்கான தனிப்பட்ட விபத்து கவரேஜ் (Personal Accident Cover for Owner-Driver) மற்றும் சொந்த சேதம் கவரேஜ் (Own Damage Cover (OD)) ஆகியவை இருக்கும்.

மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு என்பது சட்டப்படி கட்டாயமான ஒன்றாகும்.இந்த பைக் காப்பீடு எடுக்காவிட்டால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.நீங்கள் உங்கள் வாகனத்தில் பயணிக்கும் பொழுது எதிரே வரும் வாகனத்தின் மீது மோதி மூன்றாம் தரப்பினருக்கு வாகன சேதம்,உடல் காயம் அல்லது மரணம் நிகழ்ந்தால் தங்களுக்கு இந்த பைக் காப்பீடு உதவும்.

மேலும் சொந்த சேதம் கவரேஜ் மூலம் தங்கள் மோட்டார் வாகனத்திற்கு தீ விபத்து ஏற்படுதல்,வாகனம் திருட்டு போதல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் அதற்கு உரிய இழப்பீடு கிடைக்கும்.இருசக்கர வாகனங்களுக்கு என்று பேக்கேஜ் கவரேஜ்,தேர்டு பார்ட்டி பாலிஸி, சொந்த சேதம் கவரேஜ் என்று பல வகையான பாலிஸிகள் உள்ளன.நீங்கள் புதிதாக வாங்கப்போகும் இருசக்கர வாகனத்திற்கு தேர்டு பார்ட்டி லயபிலிட்டி மட்டும் பாலிஸி 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும்.பாலிசி காலம் முடிந்ததும் அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.