திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த கோவிலுக்கு நாள்தோறும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் அண்மையில் திருப்பதியில் வழங்கும் லட்டு பிரசாதத்தில் சில இறைச்சி கொழுப்புகள் கலந்துள்ளது என தெரியவந்து பல பிரச்சனைகள் நடந்தது. அப்போது கூட, லட்டு நன்றாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அறிவிப்பில் திருப்தி ஏழுமலையான் கோயிலில் சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தரிசன டிக்கெட் கோட்டாக்களும் டிசம்பர் 1 முதல் ரத்து செய்யப்படும் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய மாநில சுற்றுலாத்துறை சார்பில் தரிசன டிக்கெட்கள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆனால் இந்த டிக்கெட்டுகளை இடை தரகர்கள் மொத்தமாக வாங்கி பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து மாநில சுற்றுலா துறைக்கு வழங்கப்பட்ட டிக்கெட்களை வரும் டிசம்பர் மாதம் ரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்துக்களை தவிர வேறு எந்த மதத்தினரையும் பணியாற்ற அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. அந்த கோவிலில் பணியாற்றும் மாற்று மதத்தினரை அவர்களாகவே விருப்ப ஓய்வு கேட்டு செல்லலாம், இல்லை வேறு பணிகளுக்கு மாற்றப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.