டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2Aதேர்வர்கள் கவனத்திற்கு.. இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2Aதேர்வர்கள் கவனத்திற்கு.. இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தமிழக அரசு துறைகளில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1,2 & 2A,3,4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தி வருகிறது.கடந்த ஜூன் 09 அன்று 6000+ அரசு பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில் சுமார் 20 பேர் அந்த தேர்வை எழுதினர்.இதை தொடர்ந்து வருகின்ற ஜூலை 13 அன்று குரூப் 1 தேர்வு நடைபெற இருக்கிறது.

அடுத்து அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த குரூப் 2 & 2A தேர்வு வருகின்ற செப்டம்பர் 14 அன்று நடைபெற இருக்கிறது.இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க ஜூலை 19 இறுதி நாளாகும்.

குரூப் 2,2A தேர்வு மூலம் நன்னடத்தை அதிகாரி,வருவாய் ஆய்வாளர்,இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,நகராட்சி ஆணையர்,உதவி பிரிவு அலுவலர்,கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் உள்ளிட்ட 2000+ காலிப்பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப உள்ளது.இந்த தேர்வு எழுத ஏதேனும் ஒரு துறையில் கட்டாயம் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

குரூப் 2 தேர்வுகளுக்கு சில முக்கியமான விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.அதாவது இன்வேலிட் மதிப்பெண் முறை கடைபிடிக்க பட உள்ளது.அதாவது ஒரு கேள்விக்கு இரண்டு ஆப்ஷனை மார்க் செய்திருந்தால் அவதிற்கு இன்வேலிட் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.இதனால் தேர்வு எழுத உள்ளவர்கள் OMR தாளைஎவ்வாறு கையாள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

மேலும் குரூப் 2&2A தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.ஆட்சியர் அலுவலகம் வாயிலாக கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.எனவே தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.