வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய   நடவடிக்கை! 

0
145
Attention to Outbound Travelers! Tamil Nadu government's new move!
Attention to Outbound Travelers! Tamil Nadu government's new move!

வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய   நடவடிக்கை!

தற்பொழுது ஆயுதபூஜை அடுத்த தீபாவளி பண்டிகை நெருங்கி வர உள்ளது. வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வர். அவ்வாறு செல்லுபவர்கள் கடைசி நேரத்தில்தான் பேருந்து கிடைக்காமல் அலைமோதுவர்.தற்போது தான் தொற்றின் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழக அரசும் தற்சமயம் தான் குளிர்சாதன பேருந்துகள் இயக்க அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில் 72 குளிர்சாதன பேருந்துகள் அனைத்து மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே இயங்கி வருகிறது.

தற்பொழுது பண்டிகை சமயங்களில் அதிக அளவு கூட்டம் கூடும் என்பதால் இம்முறை தமிழக அரசு 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி தினசரி இயங்கும் பேருந்து நிலையங்களை தவிர்த்து கூட்டங்களை தவிர்க்க சென்னையில் பேருந்துகள் ஆறு இடங்களில் இருந்து இயக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் போக்குவரத்து துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, போக்குவரத்து ஆணையர் சந்தோஷ் மிஸ்ரா போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தின் இறுதியில் முடிவுகள் வெளியிடப்பட்டது.அதில் அவர்கள் கூறியதாவது, 1 .11. 2021 அன்று முதல் 3.11. 2021 வரை தினசரி 2,100 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.

நான் இந்த மூன்று நாட்கள் பண்டிகை காலம் என்பதால் கூடுதலாக 3501 சிறப்பு பேருந்துகள் இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் இயக்கப்படுவதாக கூறியுள்ளனர். பிற ஊர்களில்6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதேபோல பண்டிகை முடிந்து பயணிகளும் மீண்டும் தங்கள் வேலைக்கு திரும்ப ஏதுவாக 5 .11 .2021 முதல் 8. 11 .2021 வரை தினசரி 2,100 பேருந்துகள் உடன் 4339 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த பேருந்துகளை பயணம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல தாம்பரம் சானடோரியம் பகுதியில் 2 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மக்கள் நேரடியாக சென்று முன்பதிவு செய்ய முடியவில்லை என்றால், www. tnstc.in, tnstc official app, இந்த இணையதள வாயிலாக பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர். பேருந்துகள் இயக்கம் குறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் மக்கள் 94450 14450 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதேபோல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் வசூல் செய்தால் 0 44 247 49002 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என்று கூறியுள்ளனர். மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Previous articleஆசிரியர் தேர்வு -கால அவகாசம் நீட்டிப்பு :
Next articleசொன்ன சொல்லை காப்பாற்றாத திமுக! அரசு பணியாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம்!