ரயிலில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு! இனி லோயர் அப்பர் பெர்த் சீட் பிரச்சனை இல்லை!

0
197
attention-train-passengers-no-more-lower-upper-berth-seat-problems
attention-train-passengers-no-more-lower-upper-berth-seat-problems

ரயிலில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு! இனி லோயர் அப்பர் பெர்த் சீட் பிரச்சனை இல்லை!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தில் பேருந்திற்கு அடுத்து இருப்பது ரயில் போக்குவரத்து தான்.நாள்தோறும் லட்சக்காண மக்கள் ரயில் போக்குவார்த்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ரயில் போக்குவரத்து செலவு குறைவு என்பதினால் ஏழை,நடுத்தர மக்கள் விரும்பி பயணம் மேற்கொள்கின்றனர்.அதுமட்டுமின்றி மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயில் போக்குவரத்து பாதுகாப்பானதாக கருதப்படுவதால் இந்திய அரசாங்கம் இந்த சேவையை தெடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

பேருந்துகளுக்கு முன்பதிவு உள்ளது போல் ரயில்களுக்கும் இந்த வசதி இருக்கிறது.முன்பெல்லாம் டிக்கெட் பெற்றுக் கொண்டு ரயிலில் பயணிக்கும் வசதி இருந்தது.இதனால் அவரச காலங்களில் டிக்கெட் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது.இதனால் ரயிலிலும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியது.

ஆனால் இந்த வசதி வந்த பின்னரும் ரயில் பயணிகள் ஒரு விஷயத்தால் இன்று வரை அவதியடைந்து தான் வருகின்றனர்.அது தான் லோயர் அப்பர் பெர்த் சீட் பிரச்சனை.முன்பதிவு செய்தாலும் சில சமயம் நாம் கேட்க கூடிய சீட்கள் கிடைக்காது.

இதனால் தற்பொழுது ரயில்வே நிர்வாகம் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது.அதாவது பயணிகளுக்கு இனி எந்த சீட் வேண்டுமோ அதை ஈசியாக புக் செய்து கொள்ள முடியும்.நீங்கள் முன்பதிவு செய்யும் ரயிலில் எத்தனை காலி சீட்கள் இருக்கிறது? லோயர் மற்றும் அப்பர் பெர்த் சீட்கள் எத்தனை இருக்கிறது என்பதை எளிதில் அறிந்து கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.ரயில்வே நிர்வாகம் இந்த சேவையை “சூப்பர்” என்ற செயலி மூலம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇன்னும் சில மணி நேரத்தில் இந்த இடங்களெல்லாம் குளிரப்போகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெய்ன் அப்டேட்!!
Next articleமோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. நேரில் ஆஜராக காவல்துறை உத்தரவு!!