தொலைதூர பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் இரயில்வே நிர்வாகம் மாற்றம் கொண்டுள்ளது.
இந்திய ரயில்வே நிர்வாகமானது டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது. அதாவது நீண்ட தூரம் செல்ல நினைக்கும் பயணிகள் குறைந்த பட்சமாக 3 மாதத்திற்கு முன்பாகவே தங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்திருப்பது அவசியம். மேலும் பயணம் ரத்து செயப்பட வேண்டுமென்றாலும் அதற்குள்ளயே செய்துகொள்ளலாம்.ஆனால் ரயில்வே நிர்வாகம் தற்பொழுது புதிய முறையை அமல்படுத்தியுள்ளது.
இனி வரும் நாட்களில் நீண்ட தூரம் பயணம் செய்ய நினைப்பவர்கள் நூறு நாட்கள் முன்னதாக டிக்கெட்டை புக் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஊருக்கு செல்வதற்கு 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட்டை புக் செய்தால் போதுமானதாகும். இந்த நடை முறையானது வரும் நவம்பர் மாதம் முதல் அமலாகும் என கூறியுள்ளனர்.
இதனை தவிர்த்து தாஜ் மற்றும் கோமதி எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில் எந்த ஒரு மாற்றமுமில்லை என கூறியுள்ளனர். அதேபோல கடந்த மாதம் வரை நெடுந்தூர ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்ததில் எதுவும் ரத்து செய்யப்படாது. பழைய விதிமுறைகளே அதில் பின்பற்றப்படுவதாக தெரிவித்துள்ளனர்.