வேலையில்லா இளைஞர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Photo of author

By Vijay

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், மற்றும் சேலம் மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  நடைபெற உள்ளது.

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக 25.10.2024 வெள்ளிக்கிழமை,சென்னை-32, கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும்.

8-ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை கல்வி தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ( மேல் மருவத்தூர் ) 26.10.2024 சனிக்கிழமை அன்று  9.00 முதல் மாலை 3.00  மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து உள்ளது. 15000 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது.

8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியில் வரை கல்வி தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் உள்ள பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 26.10.24 சனிக்கிழமை, காலை 8.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும், 1000க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  8-ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை கல்வி தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Candidate Login-ல்  பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது