UPI யூசர்கள் காவனதிற்கு.. இனி ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை தான் டிரான்ஸாசக்ஷன் செய்ய முடியும்!!
நாடு முழுவதும் ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.பண மதிப்பிழப்பிற்கு பின்னர் ஆன்லைன் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி கண்டுள்ளது.UPI டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மொபைல் போனிற்கு ரீஜார்ஜ் செய்வது முதல் EB பில்,ஷாப்பிங் வரை அனைத்து விஷயங்களுக்கும் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.கடந்த ஆண்டுக்கு முன்னர் வரை 1300 லட்சம் கோடி என்று இருந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை 2023 ஆண்டில் மட்டும் 1700 லட்சம் கோடியாக உயர்ந்தது.
இந்நிலையில் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவானது UPI மூலம் ஒரு நபர் நாளொன்றுக்கு ரூ.1,00,000 வரை பணம் செலுத்தலாம் என்ற உச்ச வரம்பை நிர்ணயித்திருந்த நிலையில் கூகுள் பே,போன் பே,பேட்டிஎம் உள்ளிட்ட செயலிகள் தங்களின் யூசர்களுக்கு பணம் செலுத்துவதற்கான உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது.
கூகுள் பே
இந்த ஆன்லைன் செயலி பயன்படுத்தி வரும் நபர்கள் ஒரு நாளைக்கு ரூ.1,00,000 வரை மட்டுமே பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.அதற்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது.அது மட்டுமின்றி ஒரு நாளைக்கு 10 பரிவர்த்தனை மட்டுமே அனுமதி உள்ளது.
அமேசான் பே
இந்த ஆன்லைன் செயலி பயன்படுத்தி வரும் நபர்கள் ஒரு நாளைக்கு ரூ.1,00,000 வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.அதற்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது.அது மட்டுமின்றி ஒரு நாளைக்கு 10 பரிவர்த்தனை மட்டுமே அனுமதி உள்ளது.
போன் பே
இந்த செயலி பயன்படுத்தி வரும் பயனர்கள் ஒரு நாளைக்கு ரூ.1,00,000 வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
பேட்டிஎம்
Paytm செயலி யூசர்கள் ஒரு நாளைக்கு ரூ.1,00,000 வரை மட்டுமே பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் 5 பண பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் நிலையில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் ரூ.20,000 வரை மட்டுமே பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.அதேபோல் ஒரு நாளைக்கு 20 பரிவர்த்தனை மட்டுமே அனுமதி உள்ளது.