பணிபுரியும் பெண்களின் கவனத்திற்கு! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். இப்போது அவர் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதுதான் என்றும் பணி புரியும் இடங்களில் அவர்களுக்கு கண்ணியமான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கூறினார்.
மேலும் கண்ணியமான வாழ்க்கை ஒவ்வொருவரும் சுயமாக முடிவெடுக்கும் உரிமை அவரவர்களின் விருப்பங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் போன்றவை தான் எனவும் இந்த செய்தியில் கூறியிருந்தார். மேலும் விரும்பியவற்றை சாப்பிடவும் விருப்பமான உடைகள், அணிவதும் சுதந்திரம் ஆகும். பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம் அதேசமயம் அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டியதும் முக்கியம் எனவும் அவர்களுக்கு கண்ணியமான வாழ்வை அழித்துவிட்டால் அவர்கள் மட்டுமின்றி மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வார்கள் எனவும் கூறினார்.
மேலும் பெண்கள் எப்பொழுதும் தியாகத்தின் வடிவமாக இருக்கின்றார்கள் எனவும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறினார். மேலும் சமூக மதிப்பீடுகள் என்ற பெயரில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை போடப்படுகின்றன எனவும் அதில் குறிப்பிட்டுயிருந்தார்.