ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. ஜூலை 20க்குள் இதை செய்யாவிட்டால் கணக்கு CLOSE ஆகிவிடும்!!

0
936
Attention ZERO BALANCE ACCOUNT HOLDERS.. IF THIS IS NOT DONE BY JULY 20 THE ACCOUNT WILL BE CLOSED!!
Attention ZERO BALANCE ACCOUNT HOLDERS.. IF THIS IS NOT DONE BY JULY 20 THE ACCOUNT WILL BE CLOSED!!

ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. ஜூலை 20க்குள் இதை செய்யாவிட்டால் கணக்கு CLOSE ஆகிவிடும்!!

டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.இந்தியாவில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வது எளிதாக உள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா பேமெண்ட் முறையை எளிமையாக்க பல உத்திகளை கையாண்டு வருகிறது.ஆன்லைன் பணப் பரிவர்த்தனையால் ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது.டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் நாட்டின் கிராமப்புற பொருளாதாரம் முன்னேறி வருகிறது.

நம் நாட்டில் பாதுகாப்பான முறையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள BHIM,கூகுள் பே,போன் பே,அமேசான் பே,பேடிஎம் என்று பல UPI செயலிகள் உள்ளது.நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருவதால் அதை தொடர்ந்து கண்காணிப்பதோடு அவ்வப்போது அதற்கு சில கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்து வருகிறது.

அந்தவையில் RBI விதிகளை மீறியதாக பேடிஎம் நிறுவனத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இதன் காரணமாக பேடிஎம் பயனர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்தது.பேடிஎம் வாலட் பயன்படுத்தி வந்த பயனர்களும் அதில் இருந்த இப்புத் தொகையை எடுத்து விட்டனர்.இதன் காரணமாக ஏராளமாக பேடிஎம் பயனர்களின் வாலட்கள் ஜீரோ பேலன்ஸ் கணக்காக மாறி இருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக பேடிஎம் வாயிலாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளாத பேடிஎம் கணக்குகள் மற்றும் ஜீரோ பேலன்ஸில் இருக்கும் பேடிஎம் வாலட் கணக்குகளை மூட பேடிஎம் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.இந்த நடைமுறை வருகின்ற ஜூலை 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

அதற்கு முன்னதாக பேடிஎம் பயனர்கள் தங்கள் பேடிஎம் வாலட் கணக்கை மூட விரும்பினால் அந்த செயலில் உள்ள Paytm Payments Bank Wallet என்ற பக்கத்தில் உள்ள Need help with non-order related queries என்பதை கிளிக் செய்து I want to close my Wallet என்பதை தேர்ந்தெடுக்கவும்.இவ்வாறு செய்தால் அடுத்த 2 நாட்களில் உங்களது பேடிஎம் வாலெட் மூடப்பட்டு விடும்.